×

விவசாய கடன் தள்ளுபடி, 300 யூனிட் இலவச மின்சாரம் ரூ.500 விலையில் காஸ் சிலிண்டர்: குஜராத்தில் ராகுல் வாக்குறுதி

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களை கவர ராகுல் காந்தி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி   அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. வாக்குறுதிகளையும் வாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த பேரணியில் தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது: * குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும். * 3000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவோம். * பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு  ரூ.5  மானியம் வழங்கப்படும். * தற்போது 1000 ரூபாய்க்கு விற்கப்படும் காஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். * சர்தார் வல்லபாய் படேல் விவசாயிகளின் குரலாக இருந்தார். பாஜ ஒரு பக்கம் அவரது உயரமான சிலையை உருவாக்கியது. இன்னொரு பக்கம் அவர் யாருக்காக போராடினார்களோ அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது இது தான் பாஜவின் உண்மையான முகம். குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வாங்கிய 3 லட்சம் வரை உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். * வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடியும். 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post விவசாய கடன் தள்ளுபடி, 300 யூனிட் இலவச மின்சாரம் ரூ.500 விலையில் காஸ் சிலிண்டர்: குஜராத்தில் ராகுல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Gujarat ,AHMEDABAD ,Rahul Gandhi ,Gujarat assembly elections ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...